இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என கூறப்பட்டு சந்தையில் உள்ள பல்வேறு பொருட்களைப் புறக்கணிப்பது தொடர்பான அறிக்கை! உண்மையில் அவை இஸ்ரேலுக்கு சொந்தமானதா?

இஸ்ரேல் இல் தயாரிக்கப்பட்டது என கூறப்பட்டு சந்தையில் உள்ள பல்வேறு பொருட்களைப் புறக்கணிப்பது தொடர்பான அறிக்கை!

தற்போது, இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணிப்பது குறித்த பதிவுகள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் உலா வந்து கொண்டிருக்கும் ஒரு அம்சமாக காணப்படுகின்றது. இவ்வாறு இஸ்ரேலின் தயாரிப்புகளை புறக்கணிக்கப்பதுடன் மற்றவர்களையும் புறக்கணிக்க ஊக்குவிப்பதன் மூலமும் பாலஸ்தீனத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்.

அத்தகைய ஒரு வலைத்தள பதிவில் , 19 நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 19 நிறுவனங்களும் இஸ்ரேலைச் சேர்ந்தவை என்றும், மக்கள் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பயனர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் அதன் உண்மை தன்மையை பற்றி கண்டறிந்த தேடல் குழுவின் முழு அறிக்கையும் பின் வருமாறு:

KFC: KFC இன் வரலாற்றைப் பற்றி அதன் இணையதள ஆய்வுகளின் முடிவில் . KFC (Kentucky Fried Chicken) ஆனது 1930 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கென்டக்கியில் கொர்பின் என்னும் இடத்தில் கொலோனல் ஹார்லண்ட சாண்டர் என்பவரால் நிறுவப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். KFC உணவகமானது முதன் முதல் 1952 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்டாவில் திறக்கப்பட்டது.

McDonalds: McDonald’s முதல் விற்பனை நிலையம் 1940 இல் மயூரிஸ் மற்றும் ரிச்சர்ட் மக்டோனல்ஸ் ஆகியோரால் கலிபோர்னியாவின் (அமெரிக்கா) சென் பெர்னார்டினோவில் திறக்கப்பட்டது. 1948 இல் அவர்கள் ஒரு முறையான உணவகத்தை திறந்தனர். 1954 முதல், மக்டோனல்ஸ் இன் பல விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. (இருப்பினும் இஸ்ரேலில் உள்ள மெக்டொனல்ஸ் இஸ்ரேலிய ராணுவத்திற்கு இலவச உணவை வழங்கி தங்கள் ஆதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது)

நைக்(nike): பிரிட்டானிகா இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி,1964 இல் பில் நைட் மற்றும் பில் போவர்மேன் ஆகியோரால் நிறுவப்பட்டது மற்றும் நைக் ஆரம்பத்தில் ப்ளூ ரிப்பன் ( Blue Ribbon )என்று பெயரிடப்பட்டது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள பீவர்டனில் உள்ளது. ப்ளூ ரிப்பன் நிறுவனம் 1971 இல் நைக் என மறுபெயரிடப்பட்டது.

அடிடாஸ்(Adidas) : அடிடாஸ் ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் தோற்றம் பெற்ற நிறுவனமாகும் . நிறுவனர் அடி டாஸ்லர் தனது தாயின் சமையலறையில் முதன் முதல் அவர் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் 1949 இல் Adi Dassler adidas Sportschuhfabrik ஐ பதிவு செய்தார்

Tommy Hilfiger: Tommy Hilfiger என்பது 1985 இல் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நிறுவனமாகும். இன்நிருவானத்தின் பெயர் அதன் உரிமையாளர் தாமஸ் ஜேக்கப் ஹில்ஃபிகரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1970 இல், நியூயோர்க்கில் ஆடை கடையாக இருந்த பீப்பிள்ஸ் பிளேஸை அவர் இணைந்துக் கொண்டார் . பின்னர், அவர் தொழிலதிபர் மோகன் முர்ஜானியுடன் கைகோர்த்து 1985 இல் தனது முதல் தொகுப்பை அறிமுகப்படுத்தினார்..

குஸ்ஸி(Gucci): குஸ்ஸி 1921 இல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நிறுவப்பட்டது.

KitKat : கிட்காட் ஐ யோர்க், ஐக்கிய இரச்சியத்தில் உள்ள ரவுன்ட்ரீயில் 29 ஆகஸ்ட் 1935 அன்று ஆரம்பித்தார். தற்போது, இது நெஸ்லே(nestle )வசம் உள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் வரலாரானது 1866 இல் தொடங்குகிறது என்பதையும் இவ்வாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது . 1905 ஆம் ஆண்டில், உரிமையாளர் ஹென்றி நெஸ்லே தனது நிறுவனத்தை ஆங்கிலோ-சுவிஸ் உடன் இணைத்து நெஸ்லே குழுமத்தை உருவாக்கினார். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் வேவியில் உள்ளது.

மேகி( Maggie) : மேகி 1884 இல் சுவிட்சர்லாந்தில் ஜூலியஸ் மேகி என்பவரால் நிறுவப்பட்டது

ஓரியோ(Orio): ஓரியோ அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டனில் உள்ள செல்சியா சந்தையில் 1912 இல் நிறுவப்பட்டது.

லேஸ்: Lays என்பது H.W. lays ஆல் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நிறுவனமாகும். இது முதன்முதலில் 1932 இல் டென்னசியில் உள்ள நாஷ்வில்லில் தொடங்கப்பட்டது.

ஸ்டார்பக்ஸ்( Starbucks): ஸ்டார்பக்ஸ் 1971 இல் சியாட்டிலின் பைக் பிளேஸ் சந்தையில் நிறுவப்பட்டது. ஸ்டார்பக்ஸ் என்ற பெயர் மோபி-டிக் என்ற கதையால் ஈரக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு யோசினை ஆகும்.

கோகோகோலா(Coca Cola): கோகோ கோலா முதன் முதலில் டாக்டர் ஜான் பெம்பர்ட்டனால் 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் தொடங்கப்பட்டது

ரெட் புல்(Redbull): ரெட்புல் 1987 இல் தாய்லாந்தில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவில் உள்ளது

பெப்சி(Pepsi): பெப்சி ஒரு அமெரிக்க நிறுவனமாகும், இது 1902 இல் உரிமையாளர் காலேப் பிரதாம் என்பவரால் இணைக்கப்பட்டது.

ஸ்ப்ரைட்(Sprite): ஸ்ப்ரைட் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 1961 இல் கோகோ கோலா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது

இணையதள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் எதுவும் இஸ்ரேலில் நிறுவப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . எனவே, இவை இஸ்ரேலிய தயாரிப்புகள் அல்ல.

முடிவுரை:

தேடல் குழுவினர் இந்த கூற்றை தவறானது என்று கண்டறிந்தனர். இணைய பதிவுகலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பெயர்களும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவை, இஸ்ரேலில் உருவானவையோ அல்லது இஸ்ரேளுக்கு இலாபம் பெற்று கொடுப்பவையோ அல்ல.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

thedal.lk
Logo
Register New Account
Compare items
  • Total (0)
Compare
0