உங்க மொபைலில் அடிக்கடி நெட்வேர்க் (Internet) பிரச்னை வருதா? இத செய்ங்க சரி ஆகிடும்!

எல்லாமே இப்ப இன்டர்நெட் க்கு வந்த பிறகு Network இன் வேகம் முக்கியமா ஆகிட்டு. Slow ஆகினா ஆண்டனி செம கடுப்பாகிறுவார். இங்க கொஞ்சம் டிப்ஸ் சொல்லுறன் அந்த மாதிரி நேரத்துல செய்ங்க சரி ஆகிடும்.

 1. உங்க மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும்:
  பெரிய சீனாவித்த ஒன்னும் இல்லைங்கோ மெதுவா off பண்ணி on பண்ணுங்க. இருக்குற முக்காவாசி பிரச்சினை இல்லாம போய்டும். இன்டர்நெட் ஸ்பீட் உம் சரி ஆகிடும்.

அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது

 1. உங்க மொபைலின் சிக்னல் ஸ்ட்ரென்த்தை சரி பாருங்க:
  போன் க்கு சிக்னல் ஒழுங்கா வருதா எண்டு பாருங்க. இல்ல எண்டா நம்ம கையில ஒண்டும் இல்ல இடத்த மாத்துங்க இல்லனா டயலொக், Airtel, மொபிடெல், hutch tower கழட்டி கையோட தான் வைக்கணும்.

அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது

 1. விமானம் மோட் க்கு போயிட்டு வாங்க. அதாங்க நம்ம Aeroplane Mode:
  டங் டங் கன கன எண்டு நோட்டிபிகேஷன் வருமே அதுல இப்புடி ஒரு விமானம் இருக்கு, அத on பண்ணி Off பண்ணுங்க சரி ஆகும்.

அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது

 1. போன் Software மற்றும் அப்டேட் இருந்தா அப்டேட் பண்ணுங்க:
  இது போன் செட்டிங்ஸ் ல இருக்கும். அநேகமா About option ல இருக்கும். data அதிகமா தேவைப்படலாம் சில நேரம். update ஆனது அதுவாவே off ஆகி ஒரு மாதிரி எல்லாம் ஓடி ஓஞ்சி அதுவாவே on ஆகும் Dont worry.

அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது

 1. Network செட்டிங்ஸ ரீசெட் செய்ங்க:
  இதுவும் செட்டிங்ஸ் ல தான் இருக்கும். Network செட்டிங்ஸ் ல RESET எண்டு இருக்கும். அத குடுத்திங்க எண்டா சில நேரம் password கேக்கும் குதிங்க எண்டா RESET ஆகும்.

ஒண்டுக்கும் சரி வராட்டி ICU க்கு அனுப்புற கேஸ் 😁  எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

We will be happy to hear your thoughts

   Leave a reply

   thedal.lk
   Logo
   Register New Account
   Compare items
   • Total (0)
   Compare
   0